நடிகை நயன்தாரா விக்ரமின் 'இருமுகன்', சிவகார்த்திகேயனின் பெயரிடப்படாத புது திரைப்படம், கார்த்தியின் 'காஷ்மோரா', 'டோரா' மற்றும் சில பெயரிடப்படாத புது திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் அவர் தற்போது பெண் சார்ந்த கதையை கொண்டு உருவாகவுள்ள ஒரு புது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்திற்கு 'பொம்பல' என்பது தலைப்பு. இதை அறிமுக இயக்குனர் பாலகுமார் இயக்கவுள்ளார். 


இதில் நடிகை நமிதாவும், நயன்தாரா உடன் இணைந்து நடிக்க உள்ளார். அஜித்தின் 'பில்லா' திரைப்படத்திற்கு பிறகு நயன்-நமீதா இணைவது 'பொம்பல' திரைப்படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: