'நேரம்' திரைப்படத்தில் நடித்து, அனைவரது மனதிலும் இடம் பிடித்த நிவின் பாலி தற்போது கவுதம் ராமசந்திரன் இயக்கும் 'ஸாண்டா மரியா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படம் கன்னடத்தில் வெளிவந்த 'உளித்தவாறு கண்டந்தெ' திரைப்படத்தின் ரீமேக்காகும். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். 


நிவின் பாலியின் தந்தையாக குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.. 


மேலும்,இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று நிறைவடைந்தது, தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: