சென்னை:
பொதுநல வழக்கு என்ற பெயரில் மீடியாக்களில் பிரபலமாவதற்காக கோர்ட் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று குட்டு வைத்துள்ளது சென்னை ஐகோர்ட். எதற்கு தெரியுங்களா?


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் தந்தை மகனை போலீசார் 3 பேர் அத்துமீறி தாக்கியது தொடர்பாக வக்கீல் .கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். 


இந்த மனு மீதான விசாரணையின் போது ஐகோர்ட் நீதிபதிகள் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா?


பொது நல வழக்கு என்ற பெயரில் தினமும் காலை முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து கோர்ட் நேரத்தை வீணடிக்காதீங்க. முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடர்வதற்கு கோர்ட் அனுமதி தேவையில்லை. மீடியாக்களில் பிரபலமாக பல முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன என்று வைத்தார்கள் பாருங்க குட்டு. நீதிபதிகளின் இந்த கண்டனம் உண்மைதான். பொதுநல வழக்கு என்ற பெயரில் போடுவதும் அதுகுறித்து மீடியாக்களில் பேட்டி அளிப்பதும் தற்போது தொடர்கதையாகி வருவதால்தான் இப்படி நீதிபதிகள் குட்டு வைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: