சென்னை:
அந்த நஷ்டத்தை ஈடுகட்டினால் இந்த படத்தை வெளியிட அனுமதிப்போம்... இல்லாட்டி நாங்க வேறு முகம் காட்டுவோம் என்று விநியோகஸ்தர்கள் கொதிக்கிறார்களாம்.
என்ன விஷயம்ன்னா... விஜய் நடிப்பில் வெளிவந்த புலி படத்தை பி.டி.செல்வக்குமாருடன் இணைந்து சிபுவும் தயாரித்திருந்தார். இந்த படம் பப்படம் ஆக... அட அதாங்க... படுதோல்வியடைய... அதுவே இப்போது சிபுவிற்கு ஆப்பு வைத்தது போல் ஆகிவிட்டது.
தற்போது இருமுகன் படத்தை பெரும் பொருட்செலவில் சிபு தயாரித்திருந்தார். புலி படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டினால் தான் விக்ரம் நடித்த இருமுகனை ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலைக்கு சிபுவை விநியோகஸ்தர்கள் தள்ளி உள்ளனராம். இதனால் நொந்து போய் உள்ளார் சிபு. இதுதான் படம் தள்ளி போவதற்கு முக்கிய காரணம் என்று சொல்றாங்க.