சென்னை:
ஹாலிவுட்டில்தான் அதிக வயசானாலும் ஹீரோயின்களாக நடிப்பார்கள். அவர்களின் வயசை கண்டுபிடிக்கவே முடியாது. அப்படித்தான் நம்ம நயன்தாராவும் இருக்கார்.


வயது ஆக ஆக தான் இன்னும்... இன்னும்... இளமையாகி கொண்டே போகிறார். ரஜினி டூ தனுஷ்... இப்போ விஜய்சேதுபதி என்று இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். இன்னும் நடித்து கொண்டிருக்கிறார்.


தற்போது இளம் நடிகர்களுடன் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அப்படி இவர் தற்போது கமிட் ஆகியிருக்கிற இளம் நடிகர் யார் என்று தெரியுங்களா? நியாயமாரே... என்று கலக்கிய அதர்வாதான் அந்த இளம் நடிகர்.


டிமாண்டி காலனி சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில்தான் அவருக்கு ஜோடியாகி இருக்கிறாராம் நயன்தாரா... படத்தின் பெயர் என்ன தெரியுங்களா? இமைக்கா நொடிகள். சரியான டைட்டில்தானே... இந்த ஜோடியை பார்த்தால் யாருமே இமைக்க மறந்துதானே போவார்கள்.



మరింత సమాచారం తెలుసుకోండి: