சென்னை:
என் மேல கை வச்சா காலி... என்று தனக்கான பாணியில் இசை அமைத்துள்ளார் இவர்... யார் தெரியுங்களா?


இசை துறையில் இருந்து நடிப்பு துறைக்கு தாவி வெற்றிக் கொடி நாட்டி வரும் விஜய் ஆண்டனிதான். இப்போ இவர் நடித்து வரும் எமன்
திரைப்படத்தில்தான்...இப்படி "என் மேல கை வச்சா காலி..." என்ற பாடலுக்கு செமத்தியாக இசையமைத்துள்ளாராம்.


"நாக்க முக்க..." மற்றும் "ஆத்திச்சூடி..." பாடல்களில் ரசிகர்கள் உற்சாக துள்ளல் போட செய்தவர்தானே இவர். மற்றவர்கள் நடித்த படத்திற்கே அட்டகாச இசை போட்ட இவர் தன் படத்தை மட்டும் விட்டுவிடுவாரா?


'எமன்' படத்தின் "என் மேல கை வச்சா காலி..." பாடல் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது என்கின்றனர் கோலிவுட் வாசிகள். ஹிப் - ஹாப் தாளத்தில் ஆரம்பமாகும் பாடலை தனக்குரிய பாணியில் அட்டகாசமாக இசையமைத்துள்ளாராம். தற்போது இந்த பாடல்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: