காமெடி நடிகர் சந்தானம் தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் வசூலில் சாதனை படைத்த நிலையில், இதன் வெற்றியை கொண்டாட சந்தானம் அமெரிக்க சென்றார். 


அப்போது அங்கு வாழும் தமிழ் மக்கள், அவருடன் சேர்ந்து, செல்பி எடுக்க முண்டியடித்தனர். ஆனால் சந்தானம் அவர்களின் விருப்பத்தை ஏற்க வில்லையாம். 


இதை கவனித்த, அங்குள்ள ஒரு தமிழ் பிரமுகர், தனது சமூக வலைதள பக்கத்தில், இதுகுறித்து சந்தானத்தை பற்றி கடுமையான வார்த்தைகளில் பதிவிட்டார். இதை அறிந்த சந்தானத்தின் ரசிகர்கள், அந்த பிரமுகரை அவமதித்தனர். 


இதனால் நொந்துபோய் அந்த பிரமுகர், தனது பதிவை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார்.ஆனால், இதுகுறித்து சந்தானம் எதுவும் கூறவில்லை. 


Find out more: