சாஹோ படத்தில் நடிக்க ஷ்ரத்தாவுக்கு ரூ. 7 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஷ்ரத்தா பாலிவுட்டில் முன்னணி நடிகை கூட கிடையாது. அப்படி இருந்தும் அவருக்கு ரூ. 7 கோடி சம்பளமா என்று பலரும் வியந்தார்கள். மேலும் ஷ்ரத்தாவின் சம்பளம் குறித்து அறிந்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகள் கடுப்பானதுடன், நாங்கள் எந்த விதத்தில் குறைந்துவிட்டோம் என்று முணுமுணுத்தார்கள்.
இந்நிலையில் தான் உண்மை தெரிய வந்துள்ளது. ஷ்ரத்தா பாலிவுட்டில் தனது சம்பளத்தை உயர்த்த டோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கியது போன்ற மாயையை உருவாக்கியுள்ளாராம். உண்மையில் அவருக்கு ரூ. 7 கோடி எல்லாம் கொடுக்கப்படவில்லை என்று சாஹோ படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். சாஹோ படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃபை நடிக்க வைக்கத் தான் நினைத்தார்கள்.
ஆனால் அவர் ரூ. 5 கோடி சம்பளம் கேட்டதால் அவரை வேண்டாம் என்று கூறிவிட்டு ஷ்ரத்தாவை ஒப்பந்தம் செய்தார்கள். கத்ரீனாவுக்கே ரூ. 5 கோடி கொடுக்க மறுத்தவர்கள் ஷ்ரத்தாவுக்கு எப்படி ரூ. 7 கோடி கொடுப்பார்கள் என்று சாஹோ படக்குழுவுக்கு நெருக்கமான அந்த நபர் கேள்வி எழுப்பியுள்ளார். சாஹோ படத்தில் நடிக்க ஷ்ரத்தாவுக்கு ரூ. 7 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஷ்ரத்தா பாலிவுட்டில் முன்னணி நடிகை கூட கிடையாது. அப்படி இருந்தும் அவருக்கு ரூ. 7 கோடி சம்பளமா என்று பலரும் வியந்தார்கள்.
click and follow Indiaherald WhatsApp channel