சென்னை:
இறுதிச்சுற்று படத்திற்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது என்று கோலிவுட் கோகிலாக்கா சொல்லியிருக்காங்க... என்ன தெரியுங்களா?
மாதவன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் ‘இறுதிச்சுற்று’. குத்துச்சண்டையை மையப்படுத்தி வந்த இந்த படத்தில் நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்திருந்தார்.
சுதா கொங்கரா பிரசாத் என்பவர் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். தற்போது இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
என்னன்னா? டோக்கியோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது என்பதுதான் அந்த சந்தோஷமான, கவுரவமான செய்தி...