நகுல் நடிக்கும் 'செய்' திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் 'செய்' என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இதில் பிரகாஷ் ராஜ், நாசர் இருவரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ராஜ் பாபு இயக்கும் இந்த படத்தை ட்ரிப்பி டர்டில் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில், சென்னை மற்றும் பாண்டிசேரியில் நடைபெற்று நிறைவடைந்தது.


இதையடுத்து, 'செய்' திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. இந்த போஸ்டரில், நகுலும், ஏஞ்சலும் பப்பெட்ஸ் விளையாடி கொண்டிருப்பது ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. 


மேலும் செய் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என கூறப்படுகின்றது.


మరింత సమాచారం తెలుసుకోండి: