புதுடில்லி:
சேமிப்பு... சேமிப்பு... ரூ.1,764 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்காங்க. யார் தெரியுங்களா?


சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிகளில் சேர்ப்பிப்பதால் அரசுக்கு 1,764 கோடி ரூபாய் மட்டுமே சேமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சிஏஜி பநீசசிகாந்த் சர்மா கூறியிருப்பதாவது: 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை 12,084.24 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.


 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை 35,400.46 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது 23,316.12 கோடி ரூபாய் மானியம் குறைந்துள்ளது.


இதற்கு கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார். வங்கிக்கணக்கில் மானியம் செலுத்துவதால் போலியான இணைப்பு வைத்துள்ள நுகர்வோர் எளிதாக கண்டறியப் பட்டுள்ளனர். இதனால் உண்மையான நுகர்வோர் பயன்பெற்று வருகின்றனர். 



మరింత సమాచారం తెలుసుకోండి: