கமல் சினிமா, அரசியல் மற்றும் பொது விஷயங்கள் அனைத்திலும் முழு கவனம் செலுத்து பவர். சிக்கல்களை சந்தித்தாலும் தைரியமாக எதையும் நேராக எதிர்கொள்பவர்.

Image result for kamal haasan


தற்போது அவரை முன்னணி சானல் நிறுவனம் ஒன்று புரோக்ராமிற்கு கமிட்செய்துள்ளது. ஹிந்தி சானலில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் இதில் அமிதாப், ஷில்பா, சல்மான், சஞ்சய் என டாப் நடிகர்கள் பலரும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

Image result for kamal haasan



இப்போது இங்குள்ள பிரபல சானல் அதே போல ஒரு நிகழ்ச்சியை வழங்க முடிவு செய்து அதற்காக ரூ. 100 கோடியை பட்ஜட்டில் ஒதுக்கியுள்ளது. மேலும் தமிழ் சனலில் இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கவுள்ளார்.

தற்போது இதில் கமல் வழக்கம் போல நாட்டு நடப்பு நிகழ்வு குறித்து தன் சொந்த அதிரடி கருத்துகளை பதிவுசெய்யவுள்ளாராம். கமலுக்கும் போதுமான சம்பளத்தை கொடுப்பதாக சானல் பேச்சுவார்த்தை நடைத்துகிறது.


Find out more: