கஸ்தூரி சமீப நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் பற்றி தன் சொந்த கருத்து கூறிவருகிறார். சமீபத்தில் அவர் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தென்னிந்தியர்கள் கறுப்பர்கள் என தருண் விஜய் சொன்னதால் வந்திருக்கும் சர்ச்சை பற்றி கூறியுள்ளார்.

”தருண் விஜய் அப்படி சொல்லியிருந்தாலும் என்ன தப்பு.. நாம கருப்பு தானே. நாம என்ன வெள்ளைக்காரங்களா?“ என கேட்டுள்ளார் அமோதித்துள்ளார் கஸ்தூரி.
வடஇந்தியாவில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது பற்றி கேட்டபோது தருண் விஜய், "நாங்கள் நிறவெறி கொண்டவர்கள் அல்ல. கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களோடுதான் இவ்வளவு நாள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்" என ஒரு பிரபல டிவி பேட்டியில் கூறினார். அதற்கு தென் இந்தியர்களிடம் கடும் கண்டனம் எழவே உடனே அதற்கு அவரும் மன்னிப்பு கோரினார். ஆனால் தென் இந்தியப் பெண் கஸ்தூரி இப்படி எடக் முடக்காக கூறியுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel