ரஞ்சித் படத்தில் ரஜினியின் பெயர் தான் காலா. பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சேர்ந்த கபாலி படம் ஹிட்டானது. இதையடுத்து ரஜினி மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ள படத்திற்கு காலா என்று பெயர் சூட்டியுள்ளனர். ரஜினிக்கு மிகவும் பிடித்த பெயர் என்பதால் அதையே படத்திற்கு வைத்ததாக ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினி


காலா என்பது நீதியும் நேர்மையும் கொண்ட தமிழ் அரசர் கரிகாலனை குறிக்கும். திருநெல்வேலி பகுதியில் சிறு தெய்வ கடவுள் 'காலா'. மும்பையில் செட்டிலான நெல்லை மக்களின் வாழ்க்கை மையமாக வைத்தது  தான் காலா படம் என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன்.

ஊடகங்கள்

அவரை அனைவரும் செல்லமாக காலா என்று அழைப்பார்கள். தற்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியம் என்று ரஞ்சித் கூறியுள்ளார்.காலா தலைப்பு காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆளாளுக்கு அது பற்றியே பேசிக் கொண்டிருப்பதால் காலா ட்விட்டரில் புதிய டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

మరింత సమాచారం తెలుసుకోండి: