பல்வேறு சுச்சி சர்ச்சைகளில் சிக்கிய தனுஷ், இப்போது தான், அதிலிருந்து மீண்டு,இப்போதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறார். இந்த சூட்டோடு, அவர் நடித்த, எதிர்ப்பார்க்கப்பட்ட வி.ஐ.பி., - 2 படம் திரைக்கு வருகிறது. இதில், அமலாபால் தான், தனுஷக்கு ஜோடி என்றாலும், படம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் அளவுக்கு,நம் ஊலா லலா கஜோலுக்கு செமத்தியான கேரக்டராம்.

மிஸ்டர் பாரத் படத்தில், ரஜினியும், சத்யராஜும் எப்படி, ஒரு சவால் விடும் கேரக்டர்களில் நடித்திருந்தனரோ, அதுபோன்ற வேடங்களில், வெயிட்டான தனுஷும், கஜோலும் நடித்துள்ளனராம். படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது, தமிழ் பேசத் தனக்கு தெரியாது என்பதால், முதலில் தயங்கினாராம், கஜோல். ஆனால், 'படத்தில், உங்களின் பெரும்பாலான வசனங்கள், ஆங்கிலத்தில் தான் இருக்கும் நான் பார்த்துக்கிறேன்' என, தைரியம் கொடுத்து, நடிக்க வைத்துள்ளார், தனுஷ்.

ஆனால், அவர் கூறியதுபோல்,
ஆங்கில வசனங்கள் எதுவும் அவ்வலவா இல்லாமல், பெரும்பாலான
வசனங்கள், நம் தமிழில்
இருந்ததால், தனுஷை,
செல்லமாக கோபித்துக்
கொண்டாராம், ஹிந்தி நடிகை
கஜோல்.
click and follow Indiaherald WhatsApp channel