நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் கடைசியாக எம்.எல்.ஏ படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் பாலிவுட் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடித்துள்ளார். இப்பொழுது மீண்டும் தெலுங்கில் அடுத்ததாக பிளாப் ஹீரோ பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக கவசம் என்ற படத்தில் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடித்துள்ளார்.



இந்த படம் நாளை வெளியாகஉள்ளது. இந்நிலையில் அவர் சமீபத்தில் மீடியாவிடம் பேசினார். அப்பொழுது அவர் ஒரு தகவலை வெளியிட்டார்.




ஏற்கனவே கவசம் படத்தை தொடர்ந்து பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக இயக்குனர் தேஜாவின் அடுத்த அரசியல் படத்தில் நடித்து வரும் காஜல் மூன்றாம் முறையாக மீண்டும் சாய் ஸ்ரீநிவாஸுடன் நடிக்க உள்ளாராம். இதனால் தெலுங்கு திரை வட்டாரத்தில் காஜலுக்கும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸுக்கும் காதல் என்று கிசு கிசு வந்து கொண்டுள்ளது.  


మరింత సమాచారం తెలుసుకోండి: