நடிகை ஷ்ரியா சரண் இந்த ஆண்டு திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டார்.  இதனை தொடர்ந்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை, தமிழில் கடைசியாக அன்பானவன் அசரதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவுடனும் தெலுங்கில் காயத்திரி என்ற படத்திலும் நடித்தார்.

Image result for shriya apherald

இவர் அரவிந்த் சாமி ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்த படமான நரகாசூரன் படமோ எடுத்து முடித்தும் வெளியாகாமல் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான தேஜா இயக்கவிருந்த ஆடா நாதே வேடா நாதே படமும் டிராப் ஆனது.

Image result for shriya apherald

இந்நிலையில் வெங்கடேஷ் அடுத்ததாக நாக சைதன்யாவுடன் இனைந்து நடிக்கும் படமான பாபி இயக்கும் வெங்கி மாமா படத்தில் ஷ்ரியா சரண் வெங்கடேஷ் ஜோடியாக இணைய உள்ளார்.  


Find out more: