
சென்னை: கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவிற்கு அருகதை கிடையாது என முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான் என்றும் மீனவர்கள் படும் துயரத்திற்கு தி.முக தான் காரணம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டசபையில் ஆளுநர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதம் ஆரம்பம் முதலே காரசாரமாக நடைபெற்று வருகிறது. 1991ல் கூறியபடி கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார். பொன்முடிக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சியில் இருந்த போது தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்று கூறினார்.