மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது, தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'கத்தி' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படம் அவர் நடிப்பில் உருவாகும் 150-தாவது திரைப்படமாகும். இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். 


விவி விநாயக் இயக்கும் இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் மற்றும் ராம் சரண் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 


இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற உள்ள ஒரு ஐட்டம் பாடலுக்கு,  கேத்தரின் நடனம் ஆட ஒப்பந்தமாகியுள்ளார். இவர் கடைசியாக அதர்வாவின் 'கணிதன்' திரைப்படத்தில் நடித்தார். 


இதையடுத்து ஆர்யாவின் 'கடம்பன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் பெரிதாக வாய்ப்பு இல்லாத காரணத்தால், அவர் தற்போது தெலுங்குவில் குத்தாட்டம் போட தயாராகி உள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: