சென்னை:
அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கு... காரணம் அரசியல் கட்சித் தலைவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்தான். யாருக்கு தெரியுங்களா?
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இன்று வெளியான ஒரு பதிவுதான் பெரும் பரபரப்புக்கு காரணமாகி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்குதான் ஒரு ஜாதி அமைப்பு சார்பில் கொலை மிரட்டல் பகிரங்கமாக பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த கொலை மிரட்டல் விசி கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விசி சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பரபரப்பு மட்டும் ஓயாத நிலையே இருந்து வருகிறது.