சென்னை:
நீங்க மட்டுமா நாங்களும்தான் இருக்கோம்னு மதிமுகவும் களத்தில் குதித்துள்ளது. எதற்காக தெரியுங்களா? இதை பாருங்களேன். 
மதிமுக முக்கிய நிர்வாகியை அக்கட்சியில் இருந்து தூக்கி எறிந்து ஆட்டத்தில் நானும் உள்ளேன் என்று வைகோவும் களத்தில் இறங்கி உள்ளார். 
 
தேர்தல் தோல்விக்கு காரணமான தங்கள் கட்சி நிர்வாகிகளை  அதிமுகவும், திமுகவும் மாற்றி மாற்றி கட்சியில் இருந்து கழற்றி எறிந்து வருகின்றன. இதில் தற்போது மதிமுகவும் நானும் உள்ளேன் அய்யா என்று அட்டெனன்ஸ் போட்டுள்ளது. 


மதிமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த  ஜெகன்.தனசேகரனைதான் வைகோ அதிரடியாக அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி உள்ளார். 


அந்த கட்சிகள் நிர்வாகிகளை நீக்கினாலும் ஏகப்ட்ட பேர் இருக்காங்க... ஆனா உங்க கட்சியில் தாவினவர்கள் போக மிச்சம் மீதி இருக்கிறவங்களையும் நீங்களே நீக்கிடுவீங்க போலிருக்கே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.



Find out more: