நெல்லை:
கனவு இப்ப கருகி போய்... வாழ்க்கை இப்ப கம்பிகளுக்கு அடைந்து விட்டதே என்று சொல்ல தோன்றுகிறது. கொடூர கொலையை செய்ய துணிந்த ராம்குமாரை பற்றி வெளி வரும் ஒவ்வொரு விஷயமும் இப்படித்தான் நினைக்க வைக்கிறது.


இன்போசிஸ் சாப்ட்வேர் என்ஜீனியர் சுவாதி கொலையில் சிக்கி கைதாகியுள்ள ராம்குமாருக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருந்ததாம். அமைதியான குணம் கொண்டவர்... எப்படி இப்படி ஒரு கொடூர கொலை செய்தான். நடந்தது என்ன? என்று புரியாமல் விழித்து வருகின்றனர் அவரது கிராமத்தினர்.

என்ஜீனியர் சுவாதி


நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கார் தெருவில்தான் ராம்குமாரின் வீடு உள்ளது. ஆலங்குளத்தில் உள்ள தனியார் என்ஜீனியரிங் பி.இ.படித்துள்ளார் ராம்குமார். இதற்காக செங்கோட்டையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 3.20 லட்சம் கல்விக் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


தான் உண்டு தன் வேலையுண்டு என்ற அமைதியான குணம் கொண்ட ராம்குமாருக்கு ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். ஆனால் இடையில் அவரது குணம் எப்படி மாறியது என்பதுதான் வினோதம். சில பேப்பர்களில் அரியர்ஸ் விழுந்த நிலையில் சென்னைக்கு வந்துள்ளார் ராம்குமார். அப்போது தன் குடும்பத்தினரிடம் ஐ.ஏ.எஸ். படிக்க விருப்பம். அதனால் கோச்சிங் சென்டரில் சேர போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.


இதற்கிடையில்தான் சுவாதியை கொலை செய்துவிட்டு தற்போது தற்கொலைக்கும் முயன்று இனி சிறை கம்பிகளுக்கு இடையேதான் வாழ்க்கை என்ற நிலைக்கு வந்துள்ளார். இவர் முழுமையான வாக்குமூலம் கொடுத்தால்தான் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளியில் வரும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: