தற்போது ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். சுவாதி கொலை செய்யப்பட்ட போது ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கேண்டீனில் வேலை பார்க்கும் ஊழியர், தமிழ்ச்செல்வன் என்ற ஆசிரியர் உட்பட சிலர் கொலையாளியை நேரில் பார்த்துள்ளனர்.


இதனால் கொலையாளியை மற்ற நபர்களுடன் வரிசையாக நிற்கவைத்து அடையாள அணி வகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்தனர். அடையாள அணிவகுப்பை நடத்த ஒரு நீதிபதியை நியமிக்க கோரி சென்னை எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட்டிடம், நுங்கம்பாக்கம் போலீசார் மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட்செ ன்னையில் உள்ள மூத்த சிவில் நீதிபதியும், சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமான ஆர்.சங்கரை நியமித்து உத்தரவிட்டார்.


பின்னர் இன்று காலை சென்னை புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது அடையாளம் காண சுவாதியின் தந்தை சந்தானகோபாலகிருஷ்ணனும் வரவழைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய நீதிபதி சங்கர், உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி அணிவகுப்பு நடைபெற்றது. இதன் விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். அடையாள அணிவகுப்பு குறித்த பிற விபரங்கள் இனிதான் தெரியவரும் என்று கூறப்படுகிறது.


Find out more: