சென்னை:
அட என்னதாங்கப்பா... உங்களுக்கு பிரச்னை. மக்களுக்கு நலத்திட்டங்களுக்கு பாடுபட வேண்டியதை விட்டு விட்டு இப்படி வெளிநடப்பு செய்வது சரியா... என்று கேள்வி எழுப்புகின்றனர் நடுநிலையாளர்கள். என்ன விஷயம் என்று பார்ப்போம்.


திமுக தலைவர் கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டு சொன்னதால் தமிழக சட்டசபையில் இருந்து நேற்று திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில்தான் இந்த வெளிநடப்பு நடந்தது., 


அதிமுக எம்எல்ஏ நரசிம்மன், சட்டசபையில் பேசுகையில், திமுக தலைவரை பெயர் குறிப்பிட்டு பேசினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க விடுத்த கோரிக்கையை சபாநாயகர் புறம்தள்ளிவிட்டார். 
இதனால் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கோபமடைய செய்யணும், வம்புக்கு இழுக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் நரசிம்மன், திமுக தலைவர் கலைஞரின் பெயரை சொல்லி பேசினார். திமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். வெளிநடப்பு செய்தோம் என்றார். 


அதெல்லாம் சரிதான் 2 நாட்களுக்கு முன்னாடிதானே தமிழக சட்டசபையில் இனி எதுவாக இருந்தாலும் வெளிநடப்பு செய்ய மாட்டோம் என்று சொன்னீர்கள். இப்போது வெளிநடப்பு செய்கிறீர்களே என்று கேள்வி எழுப்பும் நடுநிலையாளர்கள்.. மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுங்கப்பா என்று வேதனையும் தெரிவிக்கின்றனர். சொன்னீங்களே... செய்தீர்களா ஸ்டாலின் அவர்களே...



మరింత సమాచారం తెలుసుకోండి: