நியூயார்க்:
அமெரிக்காவில் ஆண்டு தோறும் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான உணவுப் பொருட்களை வீணாக்குகின்றனர் என்ற செய்தி வேதனையை கிளப்பி உள்ளது. 


செல்வசெழிப்புமிக்க நாடான அமெரிக்காவில் உணவுக்கு பஞ்சமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அமெரிக்கர்கள் சரிவர உணவுப்பொருட்களை பயன்படுத்தாமல் வீணடிக்கின்றனர்.


இந்த தகவல் சமீபத்தில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட சர்வே மூலம் தெரியவந்து வேதனையை வெளிப்படுத்தி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 5,886 கோடி கிலோ எடையுள்ள உணவு பொருட்களை மக்கள் வீணடிக்கின்றனர்.


இதன் மதிப்பு ரூ.11 லட்சம் கோடி (160 மில்லியன் டாலர்) என்று கணக்கிடப்பட்டுள்ளது. அம்மாடியோவ் என்று பெரிய ஏப்பம் சத்தம் வருகிறதா? வேதனைதான். இந்த வேதனை அமெரிக்க அரசுக்கும் ஏற்பட்டுள்ளது. 


இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அளவுக்கு மீறி உணவு பொருட்கள் தயாரிப்பதால் சாப்பிட முடியாமல் காலாவதி ஆகிறது. இதனால் 70 சதவீதம் பொருட்கள் குப்பையில் வீசப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது. இதை எப்படி சீரமைப்பது என்பதுதான் அமெரிக்காவின் தற்போதைய பெரும் கவலைதான்.


మరింత సమాచారం తెలుసుకోండి: