புதுடில்லி:
சொன்னது போல் இன்று ஸ்டிரைக்கில் குதித்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் பொதுத்துறை வங்கி ஊழியர்கள்.


நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்.


பாரத ஸ்டேட் வங்கியுடன், ஐந்து துணை வங்கிகளை இணைக்கும் முடிவை கண்டித்தும், ஐ.டி.பி.ஐ., வங்கியை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய பேரமைப்பு, இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.


இதற்கு 9வது பெரிய வங்கி ஊழியர் சங்கங்கள் ஆதரவு கொடுத்தன.  இதையடுத்த இன்று வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால் சில தனியார் வங்கிகள் உட்பட 80 ஆயிரம் வங்கிக் கிளைகளில் இன்று சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: