உத்தரபிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால், தலித் தம்பதிகள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த கொலைக்கு காரணமானது 3 பிஸ்கெட் பாக்கெட்டுகள். இதன் விலை 15 ரூபாய். இந்த கடனை இன்னும் சில நாட்களில் கொடுத்து விடுகிறோம் என்று கூறிய தலித் தம்பதிதான் உயர் சாதி மளிகைக் கடைக்காரரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 மைன்புரி மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த மளிகை கடைக்கு சொந்தக்காரர் அசோக் மிஸ்ரா. இவரது கடையில் சில நாட்களுக்கு முன்பு குழந்தைளுக்காக தலித் சமூகத்தை சேர்ந்த தம்பதி மூன்று பிஸ்கெட் பாக்கெட்டுகள் வாங்கியதற்கான தொகையை கேட்டுள்ளார். மாலையில் தங்களுக்கு தினக்கூலி கிடைத்ததும் கொடுப்பதாக அந்த தம்பதி தெரிவித்துவிட்டு தங்கள் வேலைக்காக செல்ல, இதில் ஆத்திரமடைந்த மிஸ்ரா அருகிலுள்ள தனது வீட்டுக்குள் நுழைந்து அரிவாளுடன் வந்து அந்த தம்பதியை வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் அந்த இடத்திலேயே பலியாயினர். இச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கடைக்காரர் மிஸ்ராவை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: