கர்நாடகாவை சேர்ந்த நடிகையான நந்திதா சுவேதா, அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் வெற்றியை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, என சில வெற்றிப்படங்களில் நடித்தார். ஆயினும் இதனை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. 


Related image


கவர்ச்சி வேடங்கள் வந்த போதும் இவர் அவற்றை ஏற்கவில்லை. இவர் பெரிதும் எதிர்பார்த்து நடித்த விஜயின் படமான புலி படம், படு தோல்வி அடைந்து ,இவரது கேரியரை அதல பாதாளத்தில் தள்ளியது. திடீரென தனக்கு அமைந்த தெலுங்கு பட வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்ட நந்திதா இக்கடிக்கி போத்தாவு சின்னவாடா என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது தான் ஒரு தெலுங்கு படத்தை பிடித்திருக்கிறார்.


Related image


 ஆயினும் இதற்கு மேல் தனக்கு நாயகி வேடங்கள் வராது என்று உணர்ந்தோ என்னமோ அடுத்ததாக தான் நடிக்கும் நர்மதா என்ற படத்தில் ஒரு சிறுவனுக்கு தாயாக நடிக்கிறார் நந்திதா. அம்மா வேடம் போட்டாச்சு, அடுத்து பாட்டி வேடம் தான் பாக்கி என்று கேலி செய்து வருகிறார்கள் திரையுலகில். 


మరింత సమాచారం తెలుసుకోండి: