மெக்சிகோ சிட்டி:
சோகம்.. சோகம்.. என்று மெக்சிகோவில் மக்கள் பெருத்த சோகத்தில் மூழ்கி உள்ளனர். காரணம் இங்கு நடந்த வெப்பமண்டலப் புயல் மற்றும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பலியானதுதான். 


மெக்சிகோ நாட்டில் ஏல் என்ற வெப்பமண்டல புயல் கடந்த சனிக்கிழமை தாக்கியது. இதனால் மெக்சிகோ நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.


மத்திய புயப்லா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மலையடிவாரத்தில் உள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 15 சிறுவர்கள் உட்பட 28 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதேபோல், கிழக்கு மாநிலமான வெராகுரூசில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியானதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தால் அப்புறம் மக்கள் என்ன செய்வார்கள். 


இந்த கனமழையால் வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில்  தங்க வைக்கப்பட்டனர். இயற்கையின் இந்த கோர தாண்டவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: