சென்னை:
வெட்கப்படுகிறேன்... வேதனைப்படுகிறேன்... மன்னித்து கொள்ளுங்கள் என்று ஸ்டாலின் கேட்டு இருக்கிறார்... எதற்கு தெரியுங்களா?


இதோ... இதுதான் விஷயம்... சட்டசபையில் சபாநாயகருக்கு எதிரான திமுக உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.


சட்டசபையில் கைத்தறித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன் எழுதிக் கொடுத்ததை, அன்பில் மகேஷ் பொய்யாமொழி படிப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.


இதற்கு ஆட்சேபம் தெரிவித்து திமுக உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவை நடவடிக்கைகளில் சுமார் ஒரு மணிநேரம் பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து சபாநாயகருக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.


அப்போது அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட சபாநாயகர் தனபால், தன்னை திமுக உறுப்பினர்கள் கேலி செய்தனர். இதற்கு எதிர்கட்சித் தலைவர் என்ன சொல்ல போகிறார் என்று கேள்வி எழுப்பினார். 


இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், சில நேரங்களில் திமுக உறுப்பினர்களின் சுயமரியாதையை இழக்கும் வகையில் சட்டசபையில் கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் திமுக உறுப்பினர்களின் நடவடிக்கைகளால் வெட்கமும், வேதனையும் படுவதோடு, மன்னிப்பு கோருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். 



మరింత సమాచారం తెలుసుకోండి: