புதுடில்லி:
போலிகளுக்கு "ஆப்பு" வைக்கும் விதமாக மத்திய அரசு அதிரடியில் இறங்கி உள்ளது. எதில் தெரியுங்களா?
பாக்கெட்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களில், போலிகளை தடுக்க, 'பார்கோடு' எனப்படும் குறியீட்டு எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.
பாக்கெட் உணவுப் பொருட்களில் போலிகளை தடுக்கவும், மற்ற நாடுகளில் இருந்து தரம் குறைந்த உணவுப் பொருட்கள் சந்தையில் விற்பதை தடுக்கவும் மத்திய அரசு அதிரடியாக களத்தில் இறங்கி உள்ளது.
இதற்காக பாக்கெட் உணவுப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. போலிகளை தவிர்க்க, அனைத்து வகை பாக்கெட் உணவுப் பொருட்களுக்கும் 'பார்கோடு' முறையை கட்டாயமாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
இதனால் போலிகளை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. நுகர்வோர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்கின்றனர் அதிகாரிகள்.