வேறு யாருமல்ல... திமுக தலைவர் கருணாநிதிதான். இவர் கூறியது திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. அது மேலும் மேலும் வளரும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு என்ற பெயரில் தி.மு.க பொதுக் கூட்டம் சென்னை தங்க சாலையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:
நான் வெற்றி, தோல்வி குறித்து கவலைபடுவன் அல்ல. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. இருப்பினும் வலுவான எதிர்கட்சியாக நாங்கள் செயல்படுவோம்.
பல தேர்தல்களில் தோல்விகளை சந்திந்து இருக்கிறோம். ஆனால், திமுக இன்று வரை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதை வீழ்த்துவதற்கு பலரும் முயற்சி செய்கிறார்கள்.
தி.மு.க. உடன் பிறப்புக்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய தியாகத்தை செய்து மேலும் இயக்கத்தை வளர்ப்பார்கள். சூழ்ச்சி செய்து திமுகவை வீழ்த்த நினைத்தவர்களுக்கு தகுந்த தீர்ப்பு கிடைக்கும். தமிழக சட்டசபையில் முதல்வரால் எத்தனையோ அநீதிகள் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.