அண்மையில் 100 நாட்களை கடந்து, வெற்றிகரமாக ஓடி வந்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தை அடுத்து விஷ்ணு 'மாவீரன் கிட்டு' திரைப்படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இன்னொரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 


இந்த படத்தை அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கவுள்ளார். விஷ்ணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் அனைவரையும் புஷ்பா புருஷன் என்று சிரிக்க வைத்த சூரி,இந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


மேலும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள கதாநாயகி மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: