வாஷிங்டன்:
தரையில் இருக்கும் போது என்றால் பரவாயில்லை... பறந்த போது என்றால் பெரும் அச்சம் இல்லியா... என்ன விஷயம் என்றால்...?
நடுவானில் என்ஜின் உடைந்ததால் அமெரிக்க விமானம் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த போயிங் விமானம் நியூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து புளோரிடாவின் ஆர்லாண்டோ நகரத்துக்கு புறப்பட்டது. ஆரம்பம் என்னவோ நல்லாதான் இருந்துச்சு...
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏதோ பிரச்னை என்பதை உணர்ந்த பைலட் விமானத்தை அவசரமாக திசைதிருப்பி, புளோரிடா மாநிலம் பென்ஸகோலா நகர விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கி விட்டார்.
பின்னர்தான் தெரிந்தது. விமானத்தின் 2 என்ஜின்களில் 1 என்ஜின் உடைந்ததுதான் காரணம் என்று தெரியவந்தது. பைலட்டின் சாமர்த்தியத்தால் 99 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் பத்திரமாக தப்பினர். இத்தகவலை சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.