புதுடில்லி:
சூசகமாக சொன்னாலும் நம்ம ஆளுங்க புரிந்து கொள்வாங்களே... இந்த சூசகம்தான் இப்போது அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது. என்ன தெரியுங்களா?


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் சூசகமாக தெரிவித்ததுதான் மேட்டர். 


சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்து விட்டன. மேலும் இறுதிக்கட்ட வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. 


இந்நிலையில் கர்நாடகா அரசு தரப்பில் இவ்வழக்கில் ஆஜரான வக்கீல் ஆச்சாரியா எழுதிய சுயசரிதை புத்தகத்தில், தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.


அவ்வளவுதான் இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஆச்சாரியா சொன்ன தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று பரபரப்பை கிளப்பினார்.


இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவ ராய் ஆகியோர் கூறுகையில், இந்த வழக்கை விசாரிப்பதற்கு முன்பே 4 வாரத்துக்குள் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வந்து விடும் என்று சூசகமாக தெரிவித்தனர். இதுதான் தற்போது டாக் ஆப் டவுனாக உள்ளது. அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: