புதுடில்லி:
துன்புறுத்தல்தான் எங்கள் குடும்பத்தினர் தற்கொலைக்கு காரணம் என்ற கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 என்ன விஷயம் தெரியுங்களா? சி.பி.ஐ., அதிகாரிகளின் துன்புறுத்தலால் தானும், தனது குடும்பத்தினரும் தற்கொலை செய்து கொள்வதாக முன்னாள் மத்திய அரசு அதிகாரி பன்சால் எழுதிய கடிதம் தான் அது. 


மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்தில், இயக்குனர் ஜெனரலாக பணியாற்றிய பி.கே.பன்சால், டில்லியில் வசித்து வந்தார். இவர் மும்பையை சேர்ந்த நிறுவனத்திடமிருந்து, ரூ.9 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


தொடர்ந்து பன்சால் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்த... அங்கு 60 லட்சம் ரூபாய் ரொக்கம், சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.

பன்சால்

Image result for பன்சால் கடிதத்தால்

இந்நிலையில் பன்சாலின் மனைவி சத்யபாபா (58), மகள் நேஹா (27) ஆகிய இருவரும் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது ஒரு புறம் வேதனை என்றால்... ஜாமீனில் வெளிவந்த பன்சாலும்,  தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.


மற்றொரு அறையில், பன்சாலின் மகன் யோகேசும் (28) துாக்கில் தொங்கினார். அங்கு பன்சாலும், அவரது மகனும் எழுதி வைத்த 2 தற்கொலைக் கடிதங்களை டில்லி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.


இதில் பன்சால் எழுதிய கடிதத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் 4 பேர் அளித்த துன்புறுத்தலால், தானும், தனது குடும்பத்தினரும் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தன் மனைவியை சி.பி.ஐ., பெண் அதிகாரிகள் அடித்தனர். சி.பி.ஐ., டி.ஐ.ஜி., மொபைல் மூலமும், நேரிலும் மிரட்டல் விடுத்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட சி.பி.ஐ., அதிகாரிகள் மற்றும் டி.ஐ.ஜி., மீது துறை ரீதியிலான விசாரணைக்கு சி.பி.ஐ., உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை என்ற பெயரில் சிபிஐயால் ஒரு குடும்பமே அழிந்து விட்டதே என்று மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: