வேற்றுகிரகவாசிகளை நாம் ஒரு வேளை ஆராய்ந்து கண்டுபிடித்தாலும் கூட அவர்களை நாம் தொடர்பு கொள்ளாமல் தவிர்ப்பது மிக்க நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் நமது பூமியை முழுவதுமாக கைப்பற்றி விடும் அபாயம் உள்ளதாக பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.
வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வுகளில் எந்த தவறும் இல்லை. அதேசமயம், நாம் அவர்களைத் தொடர்பு கொள்ள சில முயற்சிகள் எடுப்பது சரியான செயல் அல்ல.

அது நமது அழிவுக்கு வித்திட்டு விடும் என்றும் எச்சரித்துள்ளார் ஹாக்கிங். இதற்கு முன்பும் கூட அவர் இதே போன்று எச்சரிக்கையை விடுத்திருந்தார். விஞ்ஞானிகள் கிளீஸ் 832சி (Gliese 832c) என்ற கிரகத்தை புதிதாக கண்டுபிடித்துள்ளனர். அங்கு வேற்றுகிரகவாசிகள் வசிக்கலாம் என்று பரவலாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வுகளும் தற்சமையம் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் அவர்களைத் தொடர்பு கொண்டால் நமக்குத்தான் தேவையில்லா சிக்கல் என்று ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel