சின ராணுவப் படையில் சேர்வதற்குத் ஒருவர் தகுதி பெற, செயற்கை பானங்கள், சுய இன்பத்துக்குக் கட்டுப்பாடு உள்பட 10 அறிவுரைகளை சீன ராணுவம் தற்போது தெரிவித்துள்ளது. அதிக அளவில் பாட்டிலில் அடைத்த செயற்கை பானங்கள் உட்கொள்ளுதல், கணினி மற்றும் செல்போனில் விளையாட்டு விளையாடுவதில் அதிக நேரம் செலவிடுதல் மற்றும் ஆண்களின் சுய இன்பம் ஆகிய காரணங்கள்தான் இளம் வாலிபர்களின் ஆரோக்கியம் கெட்டுப்போக மிக முக்கிய காரணம் என சீன ராணுவம் தனது இணையதள பதிவு ஒன்றில் குற்றம் வெளிப்படையாக சாட்டியுள்ளது.

மேலும், ராணுவத்திற்கான உடல்தகுதி தேர்வில் தேர்ச்சியடையாமல் தோல்வியடைபவர்களின் எண்ணிக்கை கவனத்தில் கொள்ளத்தக்க அளவிற்கு தற்போது அதிகரித்துள்ளதாகவும், உடல்தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தோல்வியடைவதாகவும் அந்த இணையதள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை பானங்கள் மற்றும் மது அருந்துதல்
கூடவே கூடாது :. அதிகமான உடற்பயிற்சி . சுய இன்பத்திற்கு தடை . ஆழ்ந்த அமர்ந்த உறக்கத்தை
அதிகப்படுத்துதல்:. உடலில் எங்கும் பச்சை குத்திக் கொள்ளக் கூடாது. சுத்தமான நீரை
மட்டுமே அருந்த வேண்டும் ஆகிய
இவைகளே அந்த கட்டளைகள்.
click and follow Indiaherald WhatsApp channel