தெலுங்கானாவில் கைதான சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்துக்கு சொந்தமான நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மேல் பார்வையிட்டு முடக்கினர். மேலும், பெங்களூருவில் இருக்கும் ஆசிரமத்தையும் அவர்கள் இழுத்து மூடினர். பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று சில தினம் முன்பு பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
Image result for gurmeet ram rahim
இதனையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் சாமியார் ஆதரவு குண்டர்கள் வன்முறை வெடித்து வெறியாட்டம் போட்டனர். இதில் 31 பேர் கொல்லப்பட்டனர். மேலும், அரசாங்க பொதுச் சொத்துக்களை தீ வைத்து எரித்து நாசப்படுத்தினர். இதனால் இரு மாநிலங்களிலும் மிகுந்த பதற்றம் கலவரம் ஏற்பட்டுள்ளது.
Image result for gurmeet ram rahim
இதனை பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் வன்முறையை மிக வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்பத்திற்கும் சாமியாரின் ஆசிரமத்தின் சொத்துக்களை முடக்கி அதிலிருந்து ஒரு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


మరింత సమాచారం తెలుసుకోండి: