பாஜகவின் கைப்பொம்மையாக ஆளுநர் வித்யாசாகர்ராவ் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஒரு சந்தேகம் எழுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது : ஆளுநர் என்பவர் எல்லாருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ஆளுநர் இப்போது பாஜக அரசின் கைப் பொம்மையாக உள்ளாரோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.

ஆளுநர் மீதான சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே சிறந்த வழி தான் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக சட்டப்பேரவையை ஒன்றுக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி அரசுக்கு ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும், என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel