ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா தனது மகள் திருமணத்தை முழு ஊரடங்கு நேரத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜி சித்தரா குணசேகரன். இவரின் மகள் சிந்து. இவருக்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பிரசாந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முழு ஊரடங்கு சேலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நடப்பதாக இருந்த திருமணம் சேலம் ஏற்காடு முருகன் கோவிலில் இன்று காலை அவசர அவசரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சேலம் அதிமுக புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர் இளங்கோவன் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டுள்ளனர். திருமண நிகழ்வை ஒட்டி ஏற்காட்டில் 500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்ததால் முழு ஊரடங்கு விதி காற்றில் பறக்க விடப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் அந்தப் பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சமூக இடைவெளி இல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திருமணம் நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒழிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை அமல்படுத்த உள்ளது இந்த நிலையிலும் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி திருமண நிகழ்வை நடத்தினர்.ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா தனது மகள் திருமணத்தை முழு ஊரடங்கு நேரத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜி சித்தரா குணசேகரன். இவரின் மகள் சிந்து. இவருக்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பிரசாந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முழு ஊரடங்கு சேலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நடப்பதாக இருந்த திருமணம் சேலம் ஏற்காடு முருகன் கோவிலில் இன்று காலை அவசர அவசரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சேலம் அதிமுக புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர் இளங்கோவன் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டுள்ளனர். திருமண நிகழ்வை ஒட்டி ஏற்காட்டில் 500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்ததால் முழு ஊரடங்கு விதி காற்றில் பறக்க விடப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் அந்தப் பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சமூக இடைவெளி இல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திருமணம் நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒழிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை அமல்படுத்த உள்ளது இந்த நிலையிலும் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி திருமண நிகழ்வை நடத்தினர்.

మరింత సమాచారం తెలుసుకోండి: