திருப்பதி:
குறைஞ்சிடுச்சு... குறைஞ்சிடுச்சு என்று சொல்லியிருக்காங்க அதிகாரிகள். எதற்கு தெரியுங்களா? இதற்குதான்...


திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 58 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இலவச தரிசனத்துக்கு 7 அறைகளில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.


இருப்பினும் இது வழக்கமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் குறைவுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் குறைந்ததால் பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் (சனிக்கிழமை) உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 66 லட்சம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: