எத்தனை செல்வம் இருந்தாலும், செவி செல்வம் இல்லையெனில், மனதிற்கு நிம்மதி இருக்காது. இதை மருத்துவ ரீதியாக குணப்படுத்திவிடலாம். அதே போல், ஆலந்துறை திருக்கோவில் தலத்திற்கு வந்து தரிசித்தால், இந்த குறை நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


இத்தலம் திருச்சி மாவட்டத்தில், லால்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது. இங்கு செவிசாய்ந்த விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். 


ஒரு காலை சம்மணம் போட்டும், மற்றொரு காலை குத்துகால் வைத்து கொண்டும் அமர்ந்து இருக்கிறார். பெரிய காதுகளை கொண்ட இவர் சற்று கூர்மையாக எதையோ கேட்பது போல், காட்சி தருகிறார். இதனால் தான் இவருக்கு செவி சாய்ந்த விநாயகர் என்ற பெயர் வந்தது. 


காது கேட்காது என்ற குறைபாடு உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால், குறைகள் உடனே சரியடையும் என்று பரவலாக பேசப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: