புதுடில்லி :
தொழில்முறை உலக குத்துச்சண்டை தர வரிசை பட்டியலில் விஜேந்தர்சிங் முதல்முறையாக 10-வது இடத்துக்கு முன்னேறி உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 


கடந்த ஆண்டில் தொழில்முறை குத்துச்சண்டையில் களம் கண்ட இந்திய வீரர் விஜேந்தர்சிங் முதல் 7 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். இதில் 6 போட்டிகளில் நாக்-அவுட் செய்தார்.


கடந்த மாதம் டில்லியில் நடந்த ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்தை வென்றதன் மூலம் விஜேந்தர்சிங் தொழில்முறை உலக குத்துச்சண்டை அமைப்பின் தர வரிசை பட்டியலில் முதல்முறையாக 10-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: