புதுடில்லி:
ஓய்வு பெறுகிறேன்... அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தங்க மகன். என்னங்க யாருன்னு தெரியலையா...


ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவின் தங்க மகனாக ஜொலித்த அபினவ் பிந்த்ராதான் அவர். இவர் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா (33). பஞ்சாபில் வசிக்கிறார். அபினவ்வின் தாத்தா இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தாத்தா ராணுவத்தில் இருந்ததால் சிறுவயதிலேயே துப்பாக்கிகள் மீது அபினவிற்கு ஓர் ஈர்ப்பு உண்டானது. பின்னர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் சேர குடும்பம் சண்டிகருக்கு இடம் பெயர்ந்தது. 


கடந்த பீஜிங்கில் 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபில் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையை உயர்த்தினார் அபினவ் பிந்த்ரா. இதன் மூலம் 108 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமை பிந்த்ராவுக்குக் கிடைத்தது.


தற்போது நடந்த ரியோ ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்து நூலிழையில் வெண்கல வாய்ப்பை பறிகொடுத்தார் அபினவ். இந்நிலையில் ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி அபினவ் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: