ரியோ டி ஜெனிரோ:
முன்னேற்றம்... முன்னேற்றம் என்று நினைத்தாலும் கடைசியில் ஏமாற்றம் ஆகிவிடுகிறது. இவராவது தங்கம் பெற்று தருவாரா என்று இந்தியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்ட இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை லலிதா பாபர் முன்னேறி இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த மற்றொரு இந்திய வீராங்கனை சுதா சிங் பைனல் வாய்ப்பை இழந்தார்.


பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டி தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் கலந்து கொண்டார். போட்டி இறுதியில் 9 நிமிடம் 19:76 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த லலிதா பாபர், நான்காவது இடத்தைப் பிடித்தார். இரண்டு ஹீட்டிலும் சேர்ந்து 7-வது இடத்தை பிடித்ததால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.


30வது இடம் பிடித்த மற்றொரு வீராங்கனை சுதா சிங் இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார். தொடர்ந்து நம் வீரர்கள் முன்னேறுவதும்... அப்புறம் வாய்ப்பை இழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.



Find out more: