ஸ்ட்ரெட்ச் மார்க்கினால் பெரும்பாலும் அவதிப்படுபவர்கள் பெண்கள் தான். கர்ப்பமான பெண்கள் எல்லோருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படும். இது ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தினால் வருகிறது. இதை நாம் கர்ப்ப காலத்திலே ஓரளவுக்கு தவிர்க்கலாம். இதை சரி செய்ய பயன்படுத்தப்படும் குறிப்புகளை நாம் இப்போது பார்க்கலாம். 


கர்ப்ப காலத்தில் விட்டமின் ஈ எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் மஞ்சள் கலந்து, வயிற்றில் தடவி கொண்டு வந்தால் இதனை தடுக்கலாம்.


இதை செய்ய தவறியவர்கள், குழந்தை பிறந்த பிறகு கூட இதை தடுக்கலாம். இதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களையும், முறைகளையும் இப்போது பாருங்கள்.


தேவையான பொருட்கள் :


மாம்பழ பட்டர் - அரை கப் 
தேங்காய் எண்ணெய் - கால் கப் 
விட்டமின் ஈ - 1 கேப்ஸ்யூல் 
தமனு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
பாதாம் போன்ற ஏதாவது ஒரு வாசனை எண்ணெய்- சில துளிகள்


ஒரு பாத்திரத்தில், மாம்பழ பட்டர் உடன் தேங்காய் எண்ணையை சேர்த்து லேசாக சூடு படுத்துங்கள். இதை நேரடியாக அடுப்பில் வைக்காமல், தோசை கல்லின் மீது வைத்து சூடாக்குங்கள். 


பிறகு இதனுடன் விட்டமின் ஈ கேப்ஸுல், தமனு எண்ணெய், வாசனை எண்ணெய் சிறு துளிகள் இவை அனைத்தையும் கலந்து, காற்று போகாத பாட்டிலில் மூடி வைத்து கொள்ளுங்கள். 


பிறகு இதை தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் இருக்கும் இடங்களில் தடவி வாருங்கள், விரைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் பிரச்சனையில் இருந்து நீங்கள் விடுபடலாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: