பெங்களூரு:
வருது... வருது... விரைவில் வருது கரப்பான் பூச்சி பால் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விஷயம் என்னன்னா?


கரப்பான் பூச்சியிலிருந்து பால் எடுக்கமுடியும். எதிர்காலத்தில் இந்த பால் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது என்று பெங்களூர் ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட் சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது உண்மைதான் என்பது போல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


பொதுவாக அனைத்து கரப்பான் பூச்சிகளும் பாலை உற்பத்தி செய்வதில்லை. பசுபிக் பகுதிகளில் வாழும் கரப்பான் பூச்சிகள், தங்களின் குஞ்சுகளுக்கு ஒருவித பாலையே உணவாக அளிக்கிறது. அந்த பால் அதிக புரோட்டின் சத்துக்களை கொண்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 


அந்த பாலில் நம் நாட்டின் எருமைமாட்டின் பாலில் உள்ள புரதத்தை விட 3 மடங்கு அதிகம். அதிக கலோரி நிறைந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அந்த கரப்பான் பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பாலில், மனிதர்களுக்கு தேவையான அமினோ அமிலங்களும் அடங்கி இருக்காம். இதனால் எதிர்காலத்தில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு இந்த வரும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆவின் பால் போல் இனி கரப்பான் பூச்சி பால் கிடைக்கும் போல...


మరింత సమాచారం తెలుసుకోండి: