ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தலைப்பு வெளியீட்டிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. காமெடி நாயகர்கள் பலர் இணைந்திருக்கும் இந்தப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக், திரையரங்கு குலுங்கும்,  காமெடி சரவெடிக்கு உறுதிகூறும்படி அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இளைஞர்களை உள்ளிழுக்கும் அதே நேரம் படத்திற்கும் பெரும் பலமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக  நடந்து வருகின்றன. இந்த நிலையில் இப்படத்திற்காக ஒரு ஃபோக் பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் “பியார் பிரேமா காதல்” படத்தில் இணைந்து High on love பாடலை எழுதிய பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி இப்பாடலையும்  எழுதியுள்ளார். இப்பாடல் கண்ணைக்கவரும் வேகமான் நகரின் அழகிய  இடங்களில்  படம்பிடிக்கப்பட்டுள்ளது.

 

ரசிகர்களை ஈர்க்கும் வகையில் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக  இப்படம் உருவாகியுள்ளது.  ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் உடன்  எம். எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்க துரை, மதுரை சுஜாதா என தமிழின் முக்கியமான கலைஞர்கள் இப்படத்தில் பங்குகொண்டுள்ளார்கள்.

 

ராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். B.ராஜசேகர் ஒளிப்பதிவு  செய்துள்ளார். ஷாம் RDX படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை  கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார். 2020 மார்ச் மாதம் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: