நம் உடலுக்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் காய்க்கறிகள், கீரைகள், பழங்களில் உள்ளன. இதனால் தான் மருத்துவர்கள், தினமும் சாப்பாட்டில் அதிகளவு காய்க்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். 


ஒவ்வொரு காய்க்கறிகளிலும், வெவேறு சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இன்றைய மருத்துவ குறிப்பு தகவலில், சுரைக்காய் உண்பதனால், ஏற்படும் நன்மைகளை நாம் பார்க்கலாம். 


1. உடல் சூட்டை நீக்குவதில், சுரைக்காயிற்கு முக்கிய பங்கு உண்டு. இதனால் சுரைக்காயை உணவில் சேர்த்து கொண்டால், வெப்ப நோய்கள் வராது.


2. சிறுநீரகம் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.இதை உண்டு வந்தால், உடலில் இருக்கும் தேவையற்ற நீர்கள், சிறுநீரகம் மூலம் வெளியேறும். 


3. சுரைக்காய் பித்தத்தை குறைக்கும். பித்தத்தால் அவதிப்படுபவர்கள் சுரைக்காய் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.


4. சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுக்கும். இரத்த சோகையை கட்டுப்படுத்தும். 


5. மூல நோய் உள்ளவர்கள், சுரைக்காய் சாப்பிடுவது மிக சிறந்த மருந்து. 


6. சுரைக்காயின் சதையை நசுக்கி, அதை உடல் தேய்த்து வந்தால் உடல் எரிச்சல் நீங்கும்.


7. சுரைக்காயை சுட்டு, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்மந்தப்பட்ட நோய்க்கால் நீங்கும். 


8. சுரைக்காய் குடல் புண்ணை ஆற்றும். 


9. மலசிக்கல் உள்ளவர்கள், சாப்பாட்டில் சுரைக்காய் சேர்த்து கொண்டால், வயிறு சுத்தமடையும்.


10. சுரைக்காய் இரத்தத்தில் இருக்கும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: